ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2021 ஆம் ஆண்டுக்கான மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேரூந்து நிலையத்திற்கு அருகில் இருந்து பேரணியாக அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி மற்றும் கட்சி கொடி ஏற்றிவைக்கப்பட்டிருந்தது.
தற்போது இடம்பெறும் மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment