ஒரே நாடு ஒரே இனம் என்ற கோசத்துடன் யாழில் போராட்டம் - Yarl Voice ஒரே நாடு ஒரே இனம் என்ற கோசத்துடன் யாழில் போராட்டம் - Yarl Voice

ஒரே நாடு ஒரே இனம் என்ற கோசத்துடன் யாழில் போராட்டம்
ஒரே நாடு ஒரே இனம் என்ற கோஷம் எழுப்பியவாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவின் யாழ்ப்பாணத்தில் இலங்கை சுதந்திர தின பேரணியை நடத்தினர்.

இந்தப் பேரணியின் நிறைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர பங்கேற்று யாழ்ப்பாணம் பொது நூலக முகப்பில் விளக்கேற்றிவைத்தார்.

இந்த பேரணிக்கு பொலிஸார் எத்தகையை தடையையும் ஏற்படுத்தவில்லை.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமான பேரணி கோட்டையை சுற்றி ஏ-9 விதிச் சந்தியில் ஊடாக கேகேஎஸ் வீதியில் பயணித்து சத்திரச்சந்தியால் வைத்தியசாலை வீதியால் பயணித்து மகாத்மா காந்தி வீதியுடாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தை வந்தடைந்தது.

இலங்கையின் சுதந்திர நாளை வடக்கு - கிழக்கில் கரிநாளாகப் பிரகடனத்தில் தமிழ் மக்கள் பல்வேறு வாழ்வுரிமை - நீதிப் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு கோவிட் -19 தொற்றுநோயைக் காரணம் காட்டி நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று தடுக்க முற்பட்ட பொலிஸார், இந்தப் பேரணிக்கு அனுமதியளித்தனர்.

2020 ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் பட்டியலில் இருந்த அருண் இந்தப் போராட்டத்தையும் தலைமையேற்று நடத்தியிருந்தார்.

இதேவேளை, ஐ.நா. நீதிகேட்டு நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எதிராக அண்மையில் இதே குழுவினர் யாழ்ப்பாணத்தில் பேரணி நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Show quoted text

0/Post a Comment/Comments

Previous Post Next Post