தமிழகத்தில் குறைவடையும் கொரோனா பாதிப்பு - Yarl Voice தமிழகத்தில் குறைவடையும் கொரோனா பாதிப்பு - Yarl Voice

தமிழகத்தில் குறைவடையும் கொரோனா பாதிப்பு


தமிழ் நாட்டில் புதிதாகஇ 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அத்தோடு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்ற 506 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாத்திரம் 158 பேர் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை கள்ளக்குறிச்சிஇ கிருஷ்ணகிரிஇ பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post