இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்தவொரு பிரச்சினையையும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய பிரச்சினையைக் கூட ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவதன் மூலம் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனோ அல்லது வேறு எந்த நாட்டினருடனோ இணைந்து கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதில்லை என இலங்கை முடிவு செய்த நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Post a Comment