உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிராகரித்துள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் பரிந்துரைகளையும் நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவிடமிருந்து மக்கள் இ;வ்வாறானதொரு அறிக்கையை எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த அறிக்கை குறித்து ஆராய்வதற்காக முழுமையான சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment