இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் - Yarl Voice இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் - Yarl Voice

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்.

ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  தா. பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.  இதையடுத்து அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து செயற்கை சுவாச கருவி  உதவியுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிறுநீரக தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் 1932ஆம்ஆண்டு பிறந்தவர் தா. பாண்டியன். இவர் பத்து ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும்வடசென்னையில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post