யாழ் சரவணை பகுதியில் வயோதிப் பெண்ணைத் தாக்கி நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது!!! - Yarl Voice யாழ் சரவணை பகுதியில் வயோதிப் பெண்ணைத் தாக்கி நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது!!! - Yarl Voice

யாழ் சரவணை பகுதியில் வயோதிப் பெண்ணைத் தாக்கி நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது!!!யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சரவணையில் பட்டப்பகலில் வயோதிப் பெண்ணைத் தாக்கி தங்க நகையை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, மானிப்பாயைச் சேர்ந்த இருவரே நேற்றுமுன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையிட்ட நகை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், அலைபேசி ஒன்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸாரர் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post