வைக்கோலை சேமிக்க கால்நடை உரிமையாளர்கள் முன் வர வேண்டும் - Yarl Voice வைக்கோலை சேமிக்க கால்நடை உரிமையாளர்கள் முன் வர வேண்டும் - Yarl Voice

வைக்கோலை சேமிக்க கால்நடை உரிமையாளர்கள் முன் வர வேண்டும்
வன்னியில் இருந்து தினமும் பல சுமை வைக்கோல் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லும் நிலையில் வன்னியில் பெரும் தொகையான கால்நடைகளை வைத்திருப்போர் வைக்கோலை பாதுகாக்க முன்வர வேண்டும் என இரணைமடு விவசாயிகள் சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகன் அழைப்பு விடுத்தார்.

மாரி காலத்தில் மாவட்டத்தின் நிலங்கள் அனைத்தும் விதைப்பிற்கு உட்படுத்தும்போது கால்நடைகளை அதிகளவில் பண்ணையாக வைத்திருப்பவர்கள் கால்நடைத் தீவணத்திற்கு பெரிதும் சிரமத்தை எதிர் நோக்குவது மட்டுமல்ல பல கால்நடைகள் உயிரிழக்கும் அவலமும் இடம்பெறுகின்றது. இருந்தபோதும் அரசும் அவர்களிற்கான மேச்சல் தரைகளும் ஒதுக்கப்படவில்லை.

இவ்வாறு அரசு அசமந்தமாக இருக்கும் நிலையில் கால் நடை உரிமையளர்களின் நன்மை கருதி விவசாயிகள் வருடந்தோறும் தமது வயலில் புல் மற்றும் செடிகளை அழிப்பதற்காக வைக்கோலை தீ மூட்டும் செயலை முடிந்தவரை கட்டுப்படுத்தியுள்ளோம்.இருப்பினும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில கால் நடைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் உழவு இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி வைக்கோலை எடுத்துச் செல்கின்றனர். இருப்பினும் வன்னியில் பட்டி உரிமையாளர்கள் அந்த முயற்சியில. ஈடுபடவில்லை.

பட்டி உரிமையாளர்களின் அதிக மாடுகளிற்கு போதிய வைக்கோலை கையிருப்பு ஏற்படுத்துவது கடினமாக இருந்தாளும் முடிந்தளவேனும் வைக்கோலை பேன எமது பட்டி உரிமையாளர்களும் முயற்சிப்பதே நல்லது. இதே நேரம் இன்னும் சில நாட்களில் விவசாயிகள் வைக்கோலை முழுமையாக பசளை கருதி தாங்கும் பணியில் ஈடுபடுவர் எனத் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post