முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்.
இந்த கலந்துரையாடல் இன்றையதினம் (27) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் த ம. பிரதீபன், அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி அதிகாரிகள், பிரதேச அரச,தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், முதலீட்டாளர்கள், நொதேன் தனியார் வைத்தியசாலை பணிப்பாளர், பனை அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்வாகத்தினர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment