பயங்கரவாத குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - Yarl Voice பயங்கரவாத குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - Yarl Voice

பயங்கரவாத குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு  நீதிமன்றத்தில் முற்பப்படுத்தாமல் தடுத்து வைத்திருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில்  இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

வெடி பொருட்கள் வைத்திருந்ததாக மற்றும் புலிகளுக்கு நிதிசேகரித்தாக மற்றும்
விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முற்ப்பட்டதாகத் தெரிவித்து 18 பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுதுது வைக்கப்பட்டு உள்ளனர். 

ஆனால்  மேற்படி  குற்றச்சாட்டுகளுடன் இவர்களுக்கு எதுவித தொடர்பும் இல்லை எனவும் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே இவர்களைத் தடுத்து வைத்துள்ளதாகவும்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை சுட்டிக்ட்டி 
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்கனவே இரு தடவைகள் முறையிடப்பட்டது.

ஆயினும்  இதற்கு உரிய பதில் கிடைக்காமையினாலேயே  இன்றையதினம் மீண்டும் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறையிட்டதுடன் தமது பிள்ளைகளை,, உறவுகளை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post