யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 2020 இறுதியில் இடம்பெற்ற அம்பன் புயல் பாதிப்பினால் ஏற்பட் பாதிப்பு களுக்கான இழப்பீடுகள் பயனாளிகளுக்கு கிடைக்கப் பெறாத நிலையில் ஒதுக்கீடுகள் மட் கிடைக்கப்பெற்றதாக யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழைக்குலை செய்தியாளர்கள் மற்றும் பப்பாசி செய்திகளுக்கான இழப்பீடுகளாக 25.77மில் விவசாய அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் நிதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
கடந்த 2020 வருட இறுதியில் இழப்புகள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக இவ்வருடம் 2021 முதல் பகுதியில் இழப்பீட்டு நிதியினை பெறமுடியாத நிலை ஏற்பட்டது .
ஆகவே வங்கி கணக்குகள் சமர்ப்பித்த பயனாளிகளுக்கு சமர்ப்பித்த பயனாளிகளுக்கு விரைவில் குறித்த நிதியை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment