மக்களைப் பாதிக்காத வகையிலையே அபிவிருத்தி அமைய வேண்டும் - மாநகர முதல்வர் மணிவண்ணண் - Yarl Voice மக்களைப் பாதிக்காத வகையிலையே அபிவிருத்தி அமைய வேண்டும் - மாநகர முதல்வர் மணிவண்ணண் - Yarl Voice

மக்களைப் பாதிக்காத வகையிலையே அபிவிருத்தி அமைய வேண்டும் - மாநகர முதல்வர் மணிவண்ணண்யாழ் பாசையூரில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கை காரணமாக  தமது தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு  என்ற பாசையூர் தொழிலாளிகளின் முறைப்பாட்டுக்கு அமைவாக நேரடியாக சென்று  யாழ் மாநகர முதல்வர்்  பார்வையிட்டாார்

ஒரு  நகரத்திற்கு  அபிவிருத்தியும்,  தூய்மை மற்றும் ஆழகு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்து.  அந்த அபிவிருத்தி குறித்த மக்களின் விருப்பத்துடனும் அவர்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அவர்களின் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் விடையங்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி சபை அதிகாரிகளுடன் கதைத்து தொழிலாளிகளுக்கு பாதிப்பு எற்படாத வண்ணமாக  புனரமைப்பு பணிகளை நடைமுறை படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.  பின்னர்  சம்மந்தபட்ட அதிகாரிகளுடன் தொழிலாளிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுக்களில் ஈடுபட்டார்.   

இதனை தொடர்து அபிவிருத்தியும் அதே நேரத்தில் தொழிலாளிகளும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் குறித்த  வாட்டர மாநகர சபை உறுப்பினர்  டெமியன் மற்றும் யாழ் மாநகர உறுப்பினர் வரதராஐன் பார்த்தீபன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post