குண்டுவெடிப்பில் சிக்கி மயக்கமடைந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைகள் - ஆப்கானில் மனதை வேதனைப்படுத்தும் ஒரு சம்பவம் - Yarl Voice குண்டுவெடிப்பில் சிக்கி மயக்கமடைந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைகள் - ஆப்கானில் மனதை வேதனைப்படுத்தும் ஒரு சம்பவம் - Yarl Voice

குண்டுவெடிப்பில் சிக்கி மயக்கமடைந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைகள் - ஆப்கானில் மனதை வேதனைப்படுத்தும் ஒரு சம்பவம்
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் சிக்குண்டு மயக்கமடைந்த  தாயை இரண்டு குழந்தைகள் எழுப்புவதற்கு முயலும் வீடியோ உலகின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாதுகாப்பு படையினரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்
இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் வெளியான வீடியோவில் உடல்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதையும் மயக்கமடைந்த நிலையில் காணப்படும் தாயை எழுப்புவதற்காக இரண்டு குழந்தைகள் கதறிஅழுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்படும் குழந்தையொன்று அம்மா எழுந்திருங்கள் என அழுவதை காணமுடிகின்றது.
குறிப்பிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவருவதுடன் பலர் கடும் வேதனையையும் அச்சத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த தாயையும் குழந்தைகளையும் இவ்வாறு பார்க்க முடியவில்லை என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

காயமடைந்த தாய்க்காக குழந்தைகள் கதறும்போது இந்த செயலை செய்தவர்கள் எப்படி தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியும் இது நிறுத்தப்படவேண்டும என அரசாங்கத்தின் சமாதான குழுவின் உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரு குழந்தைகளிற்கும் சிகிச்சை அளித்துள்ளதாகவும் தாய் கடும்காயங்களிற்குட்பட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post