பொhத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டும் விழிப்புணர்வுச் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரைக்குமான பேரணி ஆரம்பிக்கப்பட்டு நாளையதினம் யாழ்ப்பாணத்தில் நிறைவு பெற இருக்கின்ற நிலையில் இதற்கு மேலும் பொது மக்களின் ஆதரவைத் திரட்டுகின்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொது மக்கள் அதிகம் ஒன்று கூடுகின்ற சந்தைகளில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மருதனார்மடம் சந்தையில் இன்று காலை இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வு நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவண், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன், தமிழரசுக் கட்சியின் மகளீர் சங்க முக்கியஸ்தர் சசிகலா ரவிராஐ;, சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர் கு.தர்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment