அரச தரப்பினரை கொரோனா தாக்காதா? விந்தன் கேள்வி - Yarl Voice அரச தரப்பினரை கொரோனா தாக்காதா? விந்தன் கேள்வி - Yarl Voice

அரச தரப்பினரை கொரோனா தாக்காதா? விந்தன் கேள்விகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடியலையும் தாய்மாரை தாக்கும் கொரோனா அரச அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவையோ அல்லது சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரையோ தாக்கதாவென கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் நேற்றைய தினமான வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் , காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இலங்கையின் சுதந்திர தினத்தில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள்.
அங்கு வருகை தந்த இலங்கை காவல்துறையினர் கொரோனா  தொற்று ஏற்படலாமென தெரிவித்து அவர்களது அகிம்சை வழி போராட்டத்தை தடுக்க முற்பட்டனர்.
ஆனாலும் போராட்டத்திலீடுபட்டிருந்த தாய்மார் போதிய சமூக இடைவெளியை பேணி முகக்கவசம் அணிந்திருந்தனர்.

ஆனால் அதேவேளை நல்லூர் கோவில் வீதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாட்டில் கொரோனா பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல்  ஊர்வலமொன்று நடத்தப்பட்டிருந்தது.அரச அமைச்சர் தயாசிறி ஜெயசேகர ,சிங்கள காடையர்கள்,இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் வாள் வெட்டு ஆவா குழுவினரென பலரும் குறித்த ஊர்வலத்தில் பங்கெடுத்திருந்தனர்.

ஆனால் அவர்களை கொரோனா தாக்கதென்பதை இலங்கை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதனால் அவர்களது ஊர்வலத்தை நிறுத்துமாறு இலங்கை காவல்துறை கேட்கவில்லை.
அதேபோன்று வீரசிங்கம் மண்டபத்தில் கட்சி கூட்டம் மண்டபம் நிறைந்ததாக நடத்தப்பட்டுள்ளது.

அங்கும் கொரோனா வந்தடையாதென்பதை இலங்கை காவல்துறை கண்டறிந்துள்ளதாவென கேள்வி எழுப்பியுள்ளார் விந்தன் கனகரட்ணம்.
உண்மையில் இலங்கை ஜனநாயக நாடென இப்போதும் எவராயினும் சொல்வார்கள் ஆனால் அவர்களது மனநிலை பற்றி ஆராயவேண்டும்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையென தொடரும் அமைதி பேரணி மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் தொடர்ந்து பயணிக்காதிருக்க வீதிகளில் முட்கம்பிகள் ,ஆணிகள் போடப்படுகின்றன.

தமிழ் மக்களிற்கு பாதுகாப்பில்லாத நாடாக இலங்கை இருக்கின்றது.பேசுவதற்கு எழுதுவதற்கு எதற்குமே இலங்கையில் பாதுகாப்பில்லையெனவும் விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.  


0/Post a Comment/Comments

Previous Post Next Post