வலிகாமம் பாடசாலையில் மாணவர்கள் ஆடைகள் களைந்து துன்புறுத்தல் - மானித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - Yarl Voice வலிகாமம் பாடசாலையில் மாணவர்கள் ஆடைகள் களைந்து துன்புறுத்தல் - மானித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - Yarl Voice

வலிகாமம் பாடசாலையில் மாணவர்கள் ஆடைகள் களைந்து துன்புறுத்தல் - மானித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுவலிகாம பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கும் நிலையில்  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலிகாம பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 11 சேர்ந்த ஆண் மாணவர்களை மாணவர்களின் சம்மதம் இன்றி வலுக்கட்டாயமாக உடலில் பச்சை குத்தியதை பார்வையிட வேண்டும் என கூறி 70 மேற்பட்ட மாணவர்களை பாடசாலையின் தனியான ஓர் இடத்திற்கு ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் மேல் மற்றும் கீழ் ஆடைகள் களையப்பட்டு பார்வையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனேகமான மாணவர்கள் பாடசாலை செல்லாத நிலையில் அங்கு கல்வி கற்பிக்கும் பெண் ஆசிரியர்களை குறித்த மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி மீண்டும் பாடசாலையில் இணைத்துள்ளனர்.

இச்சம்பவத்தால் தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து முறைப்பாட்டாளர் ஊடாக தமது கோரிக்கை கடிதத்தை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் யார் மனித உரிமை ஆணைக்குழுவின் அமைப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாகவும் இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சை விளக்கமளிக்குமாறு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post