தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் திருப்தி அளிக்காததால் கட்சி ஆரம்பித்தேன் - அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சி தலைவர் ஜெயந்திரன் தெரிவிப்பு - Yarl Voice தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் திருப்தி அளிக்காததால் கட்சி ஆரம்பித்தேன் - அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சி தலைவர் ஜெயந்திரன் தெரிவிப்பு - Yarl Voice

தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் திருப்தி அளிக்காததால் கட்சி ஆரம்பித்தேன் - அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சி தலைவர் ஜெயந்திரன் தெரிவிப்பு


தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் திருப்பி அதன் காரணமாக   அகில இலங்கை தமிழ் மக்கள் அளிச்சிக் கட்சியை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் ஜெயந்திரன் தெரிவித்தார் .

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் சரியான பாதையை காட்டாத நிலையில் பிரச்சினைகள் வேறு விதமாக மாற்றம் பெற்றுச் சென்றது.

நான் ஆரம்பித்த அரசியல் கட்சியானது இனம் மதம் மொழி பாகுபாடுகளுக்கு அப்பால் எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்படுவதே எனது நோக்கமாக உள்ளது.

எனது அரசியல் கட்சியின் எதிர்கால அரசியல் குறித்தும் கட்சியின் பதவி நிலைகள் குறித்தும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும்.

ஆகவே புதிய நோக்கோடு எமது புதிய அரசியல் பயணத்தை விரும்புபவர்கள் எம்மோடு சேர்ந்து பயணிக்க வருமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post