எதிர்ப்புகளையடுத்து காரைநகரில் கடற்படையினருக்கு காணிசுவீகரிப்பு இடைநிறுத்தம் (படங்கள்) - Yarl Voice எதிர்ப்புகளையடுத்து காரைநகரில் கடற்படையினருக்கு காணிசுவீகரிப்பு இடைநிறுத்தம் (படங்கள்) - Yarl Voice

எதிர்ப்புகளையடுத்து காரைநகரில் கடற்படையினருக்கு காணிசுவீகரிப்பு இடைநிறுத்தம் (படங்கள்)




காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. 

காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து கணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வளிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதன் படி குறித்த காணிகளை அளவிடும் பணிகளுக்காக நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்த போது அங்கு ஒன்று கூடியவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்பட்டுத்தினர். 

இதனை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் பேச்சாளர் சுகாஷ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்











.

0/Post a Comment/Comments

Previous Post Next Post