மனிதஉரிமை நிலவரம் மோசமடைவது வன்முறைகளிற்கு வழிவகுக்கலாம் - ஜெனீவாவில் கனடா கவலை - Yarl Voice மனிதஉரிமை நிலவரம் மோசமடைவது வன்முறைகளிற்கு வழிவகுக்கலாம் - ஜெனீவாவில் கனடா கவலை - Yarl Voice

மனிதஉரிமை நிலவரம் மோசமடைவது வன்முறைகளிற்கு வழிவகுக்கலாம் - ஜெனீவாவில் கனடா கவலை




இலங்கை குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக கனடா தெரிவித்துள்ளது.

ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கையின் முடிவு குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ள  கனடா நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலிற்கான உள்நாட்டு நடைமுறைகள் தோல்வியடைந்துவிட்டன தொடர்ச்சியாக பலாபலன்களை அளிக்க தவறிவிட்டன என கனடா தெரிவித்துள்ளது.

கனடா மேலும் தெரிவித்துள்ளதாவது
உயிர்பிழைத்தவர்கள் நீதியை பெறுவதற்கான தங்கள் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.
ஆதாரங்களை முன்வைப்பதற்காக மிகவும் அசாதாரணமான ஆபத்தான சூழ்நிலையை அவர்கள் துணிந்து எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களுடைய துணிச்சலையும்  உறுதிப்பாட்டையும்  நாங்கள் ஆதரிக்கின்றோம்.

மனிதஉரிமை நிலவரம் மோசமடைவது குறித்த மனித உரிமை ஆணையாளரின் கரிசனைகளை நாங்கள் பகிர்ந்துகொண்டுள்ளோம்.இது மீண்டும் வன்முறைகளும் மோதல்களும் இடம்பெறும் வருந்தத்தக்க நிலைக்கு இட்டுச்செல்லக்கூடும்.

முஸ்லீம்களின் உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படுவதும் தமிழர்கள் நிளைவஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதும் நாட்டில் மேலும் பிரிவினை ஏற்படுத்தலாம்.
இலங்கையை தனது நிகழ்ச்சிநிரலில் மனித உரிமை பேரவை வைத்திருக்கவேண்டிய தேவையுள்ளது என கனடா கருதுகின்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post