எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் இறுதி அழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்- நவநீதம் பிள்ளை - Yarl Voice எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் இறுதி அழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்- நவநீதம் பிள்ளை - Yarl Voice

எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் இறுதி அழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்- நவநீதம் பிள்ளை
காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
 

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின்  தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.
தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.

காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post