தொல்பொருள் இராஜாங்க அமைச்சரை யாழ்ப்பாணம் வருமாறு அங்கஜன் அழைப்பு - Yarl Voice தொல்பொருள் இராஜாங்க அமைச்சரை யாழ்ப்பாணம் வருமாறு அங்கஜன் அழைப்பு - Yarl Voice

தொல்பொருள் இராஜாங்க அமைச்சரை யாழ்ப்பாணம் வருமாறு அங்கஜன் அழைப்பு
தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை யாழ்ப்பாணம் வருமாறு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சரை நேரில் சந்தித்த கௌரவ அங்கஜன் இராமநாதன் யாழ் மாவட்டத்தில் தீடீரென மேற்கொள்ளும் தொல்பொருள் நடவடிக்கைகள் மூலம் முரண்பாடுகள் ஏற்படுவது தொடர்பில் எடுத்துக் கூறியதுடன் அதனை  தீர்க்கும் வகையில் யாழ் மாவட்டத்திற்கு நேரடியாக வருகை தருமாறு அமைச்சரை கேட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தொல்பொருள் இடங்கள் தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post