நாவற்குழியில் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் மடக்கி பிடிப்பு - - Yarl Voice நாவற்குழியில் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் மடக்கி பிடிப்பு - - Yarl Voice

நாவற்குழியில் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் மடக்கி பிடிப்பு -




ஆட்டோவுக்கு பெற்ரோல் முடிந்து விட்டதாக கூறி வீதியோரத்தில் நின்று பணத்தை தொடர்சியாக சூட்சுமமாக முறையில் வசூலித்து வந்த குழுவை நாவற்குழி இளைஞர்கள்
மடக்கியப் பிடித்துள்ளனர்.

இன்று இரவு 07:30 மணியளவில் இச்சம்பவம் நாவற்குழிப் பாலத்திற்கும் யாழ் வரவேற்பு வளைவுக்குமிடையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- 

நாவற்குழிப் பாலத்தருகே குறித்த குழுவொன்று மாலை நேரங்களில் ஆட்டோவை நிறுத்தி வைத்து, வீதியால்ப் போய் வருவோரை மறித்து ஆட்டோவுக்கு பெற்ரோல் முடிந்து விட்டதாக கூறி பணம் மற்றும் பெற்ரோலை சூட்சுமமாக கொள்ளையடித்து வந்துள்ளனர். 

இதனை தொடர்சியாக அவதானித்து வந்தவர்கள் இளைஞர்களிடம் கூறியுள்ளனர், இதனையடுத்து நாவற்குழி இளைஞர்கள் குறித்த பகுதிக்குச் சென்று சம்பவத்தை அவதானித்து, கொள்ளையர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். 

சம்பவ இடத்தில் இராணுவத்தினர் வருகை தந்திருந்த நிலையில், சாவகச்சேரிப் பொலிஸாருக்கு இளைஞர்கள் தகவலை வழங்கியதையடுத்து பொலிஸார் வருகை தந்தனர், இதன் குறித்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post