ஸ்ரீலங்கா கிரிக்கெட் அலுவலக உறுப்பினர் தேர்தலில் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் போட்டி - Yarl Voice ஸ்ரீலங்கா கிரிக்கெட் அலுவலக உறுப்பினர் தேர்தலில் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் போட்டி - Yarl Voice

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அலுவலக உறுப்பினர் தேர்தலில் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் போட்டி
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அலுவலக உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனசெத பெரமுன கட்சித் தலைவர் வண.பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 

தேரர் கிரிக்கெட் நிறுவனத்துக்கு இன்று காலையில் சென்று தனது வேட்பு மனுவை வழங்கியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

சீலரத்ன தேரர் வடக்கு மாகாணத்திலுள்ள புனித அந்தோனியார் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இப்பதவிக்கே வேட்பு மனுவை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post