இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - ஐரோப்பிய ஒன்றியம் கவலை - Yarl Voice இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - ஐரோப்பிய ஒன்றியம் கவலை - Yarl Voice

இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - ஐரோப்பிய ஒன்றியம் கவலை




இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்துள்ள வழிவகைகளிற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட சாதகமான விடயங்களில் பின்னடைவு ஏற்படுவது குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இழப்பீட்டிற்கான அலுவலகம் போன்றவற்றை பாதுகாப்பதும் அவர்களுக்கான சுதந்திரத்தையும் நிதிவளங்களையும் வழங்குவதும்    அவசியம் என தெரிவித்துள்ளது.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைநிலவரத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்த மனித உரிமை ஆணையாளரின் கரிசனையை பகிர்ந்துகொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.சிவில் சமூகத்தினர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளமை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

1

0/Post a Comment/Comments

Previous Post Next Post