அப்பாவுடன் க்யூட் செல்ஃபி.. வைரலாகும் கமல், ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் - Yarl Voice அப்பாவுடன் க்யூட் செல்ஃபி.. வைரலாகும் கமல், ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் - Yarl Voice

அப்பாவுடன் க்யூட் செல்ஃபி.. வைரலாகும் கமல், ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள்
உலகநாயகன் கமல்ஹாசன் உடன் அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமாவுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்த ஸ்ருதிஹாசன் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாவுடன் எடுத்த க்யூட்டான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் கண்ணாடிக்கு முன் நின்று கொண்டு தனது தந்தையுடன் எடுத்த க்யூட்டான செல்ஃபி புகைப்படம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த போட்டோவில், கமல்ஹாசனின் கில்லிங் லுக் வேற லெவல். பல லட்சம் லைக்குகளும் ப்ளூ டிக் பிரபலங்களின் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் Daddy dearest (அப்பா செல்லம்) என்கிற கேப்ஷனுடன் இந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். தமன்னா, பிக் பாஸ் சோமசேகர், உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த போட்டோக்களுக்கு ஹார்ட்டீன் போட்டுள்ளனர்.

lமோகன் லாலின் திரிஷ்யம் 2 மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் கமலையும் ஸ்ருதியையும் ஒன்றாக பார்த்த இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் பாபநாசம் 2 வருமான்னு அப்பா கிட்ட கேட்டு சொல்லுங்க ஸ்ருதி என ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது காதலர் சாந்தானு ஹசாரிகாவின் நெருக்கமான போட்டோக்கள் வைரலான நிலையில், சில நெட்டிசன்கள், புது காதல் விஷயத்தை அப்பா கிட்ட சொல்லியாச்சா என்றும் கேட்டு கமெண்ட் செய்துள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஸ்ருதி நடித்துள்ள லாபம் விரைவில் திரைக்கு வருகிறது. பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post