சித்த மருத்துவ பட்டதாரிகள் யாழில் போராட்டம் - படங்கள் - Yarl Voice சித்த மருத்துவ பட்டதாரிகள் யாழில் போராட்டம் - படங்கள் - Yarl Voice

சித்த மருத்துவ பட்டதாரிகள் யாழில் போராட்டம் - படங்கள்சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை குறித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது.

இதன் பிரகாரம் சித்தமருத்துவ பட்டதாரிகள் கடந்த நான்கு வருடமாக தமது பட்டத்தினை முடித்த மாணவர்கள் தாம் பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் பேரணி இடம்பெற்றது.

தங்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பார்ட்ட பேரணியானது சித்தமருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்திய சாலை வரை இடம்பெற்றது.

இதன் படி தமது போராட்டத்திற்கு சித்த மருத்துவ மாணவர் ஒன்றியம் ஆதரவு தந்த போதிலும் மாணவர்களை வெளியே விடாது சித்த மருத்துவத்துறை தடுத்து நிறுத்தியதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினார்கள்.0/Post a Comment/Comments

Previous Post Next Post