கணவரிடம் பணம் பெறுவதற்காகவே பிள்ளையை தாக்கி வீடியோ எடுத்து அனுப்ப முயற்சி - குற்றச்சாட்டில் மூவர் கைது - Yarl Voice கணவரிடம் பணம் பெறுவதற்காகவே பிள்ளையை தாக்கி வீடியோ எடுத்து அனுப்ப முயற்சி - குற்றச்சாட்டில் மூவர் கைது - Yarl Voice

கணவரிடம் பணம் பெறுவதற்காகவே பிள்ளையை தாக்கி வீடியோ எடுத்து அனுப்ப முயற்சி - குற்றச்சாட்டில் மூவர் கைது
குவைத்தில் உள்ள கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக 07 மாதமே நிரம்பிய  பெற்ற பிள்ளையை தாக்கும் வீடியோ தயாரித்த தாய் உள்ளிட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிசார் கைது செய்தனர்.

திருகோணமலையை சேர்ந்த யுவதி குவைத் நாட்டில் தங்கியிருந்த சமயம் இந்தியாவைச் சேர்ந்ந முஸ்லீம் நபர்  ஒருவரைத் திருமணம் செய்துள்ளார்.

 இதன் பிரகாரம் குவைத்தில் குழந்தை பிறந்த நிலையில் கடந்த இரு மாதங்களிற்கு முன்பு  நாடு திரும்பி தற்போது  மணியந்தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கின்றார்.

 இவ்வாறு வாழ்பவருக்கு கணவர்  பணம் அனுப்பவில்லை என்ற விரத்தியில் இருந்துள்ளார்.

இதனால் குழந்தையை தாக்கும் வீடியோவை எடுத்து கணவரிற்கு அனுப்பும் நோக்கில் தாயார் குழந்தையை தாக்கும் சமயம் தாயாரின் உடன் பிறந்த சகோதரன் அதனை ஒளிப்படம் செய்துள்ளார் . இதேநேரம் மற்றுமொருவர் அருகில் இருந்துள்ளார்.

 இந்த விடயம்நல்லூர்ப் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனையடுத்து பிரதேச செயலாளரின் உத்தரவின் பெயரில் சிறுவர் நன்நடைத்தை திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு திணைக்களம், பொலிசார் சகிதம் கிராமசேவகர் ஆகியோர் நேரில் சென்று குழந்தையை தாக்கிய தாயார் உட்பட அதனை ஒளிப்படம் செய்து பணம் ஈட்ட உதவியர் மற்றும் அச் செயலிற்கு உதவியவர் என மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் குறித்த குழந்தை குவைத் நாட்டில் பிறந்தமையால் இதுவரை பிறப்பு சான்றிதழும் கிடையாது எனவும் இந்த செயலில் ஈடுபட்ட குழந்தையின் தாயார், பிள்ளையை தாக்கும்போது அருகில் படுத்துறங்கிய தாயாரின் தாயார் மற்றும் ஒளிப்படம் தயாரித்த சகோதரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒளிப்படத்தில் இன்னுமோர் குரல் வெளி வருவதனால் இச் சம்பவத்தின் போது அங்கே நின்ற நான்காவது நபர் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post