குழந்தையையும் தாயாரையும் சட்ட மருத்துவ வல்லுநரிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice குழந்தையையும் தாயாரையும் சட்ட மருத்துவ வல்லுநரிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice

குழந்தையையும் தாயாரையும் சட்ட மருத்துவ வல்லுநரிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவுயாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை தாயார் 
அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் அரியாலை - நாவலடி பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் குழந்தை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை சிறுவர் சீர்திருத்த நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தாயாரை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் முற்படுத்தி மனநிலை மற்றும் பிற மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த குழந்தையை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி, காயங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post