வட்டக்கச்சியில் 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை முயற்சி ; தாயார் காப்பாற்றப்பட்டார் - ஒரு குழந்தை உயிரிழப்பு - Yarl Voice வட்டக்கச்சியில் 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை முயற்சி ; தாயார் காப்பாற்றப்பட்டார் - ஒரு குழந்தை உயிரிழப்பு - Yarl Voice

வட்டக்கச்சியில் 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை முயற்சி ; தாயார் காப்பாற்றப்பட்டார் - ஒரு குழந்தை உயிரிழப்புகிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதி யில் வசிக்கும் தாயார் ஒருவர் குடும்பத் தகராறின் காரணமாக தனது மூன்று  பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற போதும் தாயார் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள ஒற்றைக்கை  பிள்ளையார் ஆலயம் அருகில் இருந்த கிணற்றுக்குள்  தனது  பிள்ளைகளைப் போட்ட தாயார் தானும் கிணற்றில் குதித்துள்ளார்.

தாயார் கிணற்றில் குதிப்பதை அவதானித்த சிலர் உடன் கிணற்றில் பாய்ந்து காப்பாற்ற முயன்றதில் தாயார் உயிருடன் மீட்கப்பட்டார். குழந்தைகள் மூவரில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையஇரு  பிள்ளைகளையும் தேடும் பணி இடம்பெறுகின்றது.

மற்றைய இரு குழந்தைகளும் கிணற்றில் தான் என தாயார் கூறியதை அடுத்து கிணறு இறைக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

வட்டக்கச்சி - 5 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் இந்தத் தாயார் குடும்பத் தகராறின் காரணமாகவே இந்த முடிவுக்குச் சென்றிருக்கலாம்  எனத் தெரிவிக்கப்படுகிறது. 

வட்டக்கச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post