வடக்கில் 3 கட்டங்களாக கண்புரை சத்திர சிகிச்சை முகாம் ; பதிவு செய்யுமாறு கோரிக்கை - Yarl Voice வடக்கில் 3 கட்டங்களாக கண்புரை சத்திர சிகிச்சை முகாம் ; பதிவு செய்யுமாறு கோரிக்கை - Yarl Voice

வடக்கில் 3 கட்டங்களாக கண்புரை சத்திர சிகிச்சை முகாம் ; பதிவு செய்யுமாறு கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் கண்புரை நோயால் அவதியுறும் நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை முகாம்களை மூன்று கட்டங்களாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில், 

எதிர்வரும் மே மாதம் வட மாகாண சுகாதார திணைக்களமும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையும் இணைந்து கண்புரை சத்திர சிகிச்சை முகாங்களை 3 கட்டங்களாக நடத்தத் தீர்மானித்துள்ளன.

எனவே, கண்புரை நோயால் அவதியுறும் நோயாளர்கள் தத்தமது பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் மாவட்டப் பொது வைத்தியசாலைகள் (கிளிநொச்சி, முல்லைத் தீவு,வவுனியா, மன்னார்), பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி, மாங்குளம், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைகளில் அல்லது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவுகளை மேற்கொண்டு சத்திர சிகிச்சையைப் பெற முடியும் என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post