நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் கண்காணிப்பாதாக ஹரீன் பெர்ணான்டோ குற்றச்சாட்டு - Yarl Voice நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் கண்காணிப்பாதாக ஹரீன் பெர்ணான்டோ குற்றச்சாட்டு - Yarl Voice

நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் கண்காணிப்பாதாக ஹரீன் பெர்ணான்டோ குற்றச்சாட்டுநாடாளுமன்ற உறுப்பினர்களின் கையடக்க தொலைபேசிகளை வேவுபார்ப்பதற்கான மென்பொருள் ஒன்றினை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தொலைவிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிகளை கண்காணி;க்க கூடிய மென்பொருளை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்காணிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்தி தொலைதூரத்திலிருந்து கையடக்கதொலைபேசி கமராக்களை இயக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை சேர்ந்தவர்கள் உட்பட இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஹரீன்பெர்ணான்டோ இவ்வாறான நடவடிக்கைகளால் எதிர்காலங்களில் மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post