க.பொ.த சாதாரணப் பரீட்சை ஆரம்பம் - வடக்கில் 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள் - Yarl Voice க.பொ.த சாதாரணப் பரீட்சை ஆரம்பம் - வடக்கில் 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள் - Yarl Voice

க.பொ.த சாதாரணப் பரீட்சை ஆரம்பம் - வடக்கில் 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள்



வடக்குமாகாணத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள்  தோற்றுகின்றனர்.

இவர்களில் 23 ஆயிரத்து 679 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 20 ஆயிரத்து 566 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடக்குகின்றனர்.

அந்த வகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 352  பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 11 ஆயிரத்து 130  தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 22 ஆயிரத்து 482 பேர் பரீட்சைக்கு  தோற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 392  பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 74  தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 5 ஆயிரத்து 466 பேர் பரீட்சைக்கு  தோற்றுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2  ஆயிரத்து 919 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், ஆயிரத்து 855  தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4 ஆயிரத்து 774 பேர் பரீட்சைக்கு  தோற்றுகின்றனர்.

அத்தோடு வவுனியா மாவட்டத்தில்  3 ஆயிரத்து 771  பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 860  தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 6 ஆயிரத்து 631 பேர்  பரீட்சைக்கு  தோற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில்  2 ஆயிரத்து 245  பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2  ஆயிரத்து 647   தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக  மொத்தமாக 4 ஆயிரத்து 892 பேர் பரீட்சைக்கு  தோற்றுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post