தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு நேற்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையரங்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றம் மண்டபத்தில் நேற்று மரபியலாளர் ஜீ.ஜெயதீஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில், மரபுரிமை அரசியல் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கலாநிதி பரமு புஸ்பரட்ணமும், வனவள அரசியல் எனும் தலைப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனும், ஜெனிவா அரசியல் எனும் தலைப்பில் அரசியல் கருத்தியலாளர் நிலாந்தனும் மற்றும் சிறப்புரையினை யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளாரும் உரையாற்றியிருந்தனர்.
கருத்தரங்கில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment