ஈழத் தமிழர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகிறது இலங்கை அரசு - ஜ.நா அமர்வில் சிவாஜிலிங்கம் - Yarl Voice ஈழத் தமிழர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகிறது இலங்கை அரசு - ஜ.நா அமர்வில் சிவாஜிலிங்கம் - Yarl Voice

ஈழத் தமிழர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகிறது இலங்கை அரசு - ஜ.நா அமர்வில் சிவாஜிலிங்கம்



மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  46 வது அமர்வில் சிவாஜிலிங்கம் 

இலங்கையானது இனப் பேதத்தின் சகல வடிவங்களையும் இல்லாதொழித்தல் என்ற சமவாயத்தை 1982 ஆம் ஆண்டு ஏற்புறுதி செய்தது. 

ஆயினும் சம வாய்ப்புக்களைப் 
பெறுவதன் பொருட்டு தமிழர்கள் போராட வேண்டியுள்ளது. இலங்கை இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை யுத்தத்தைப் புரிந்துள்ளனர். 

அடுததுவந்த இலங்கை அரசாங்கங்கள் ஐஊநுசுனு ஐத் தொடர்ச்சியாக மாறியுள்ளதுடன் தற்போதய அரசாங்கமும் ஒத்த போக்கையே தொடர்ந்துள்ளது.

 தற்போதய அரசாங்கமானது 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைத் தொடுக்காமலேயே எண்ணற்ற தமிழர்களைத் தடுத்துவைத்துள்ளது. 

ஆனால் ஐஊநுசுனு இன் உறுப்புரை 5 (ய) ஆனது 'நீதியை நிர்வகிக்கின்ற நியாயசபைகளினதும் ஏனைய சகல அங்கங்களினதும் முகதாவில் சமமாகக் 
கையாளப்படுவதற்கான உரிமையை' கோருகின்றது. 

அதே உறுப்புரையானது 'நாட்டு எல்லையினுள்ளே சுயாதீனமாக நடமாடுவதறகும் வதிவதற்குமான உரிமையை' குறித்து நிற்கிறது. 

ஆனால் தற்போதய அராசாங்கமானது 
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளினுள் பல பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனஞ் செய்துள்ளது. 

1990 களிலிருந்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ள10ரில் இடம்பெயர்ந்த நபர்களாகவே வசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் பேதங்களால் தொடர்ச்சியாகத் துன்புறுகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post