பொத்துவில் பொலிகண்டி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு - Yarl Voice பொத்துவில் பொலிகண்டி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு - Yarl Voice

பொத்துவில் பொலிகண்டி தொடர்பான வழக்கு ஒத்திவைப்புபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்காளிகள் சார்பில் 
மாதினி விக்னேஸ்வரன், 
ருவான் குணசேகர, மாதவ தென்னக்கோன் முன்னிலையாகிய அதே வேளை, 

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், வி.மணிவண்ணன், வி.திருக்குமரன், கே.சயந்தன் உட்ப்பட 11 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இன்று குறித்த வழக்கு இடம்பெற்ற நிலையில் வழக்கு கட்டளைக்காக மே மாதம் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post