விக்ரமின் 60வது படத்தில் கமிட்டாகியிருக்கும் வாணிபோஜனின் ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் விக்ரம். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் எவ்வளவு பெரிய ரிஸ்க் என்றாலும் அசால்ட்டாக நடித்து முடிக்க கூடியவர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக விக்ரம் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்தது
தற்போது கோபுரா, பொன்னியின் செல்வன் என பிஸியாக உள்ள விக்ரம், அடுத்து தனது 60வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் டிவி நடிகை வாணி போஜனும் இணைந்துள்ளார்
இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதில் முதலில் வாணி போஜன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சியான் 60 படத்தில் வாணி போஜனின் ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி விக்ரமின் கேர்ள் ஃபிரண்டாக நடிக்கிறாராம் வாணி போஜன். தற்போது விக்ரம் கோபுரா படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்றுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விக்ரம் ஊர் திரும்பியதும் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment