இலங்கை வீரர் தனுஷ்க புதிய விதிமுறைகளில் ஆட்டமிழப்பு -கிரிக்கெட் உலகில் புதிய சர்ச்சை - Yarl Voice இலங்கை வீரர் தனுஷ்க புதிய விதிமுறைகளில் ஆட்டமிழப்பு -கிரிக்கெட் உலகில் புதிய சர்ச்சை - Yarl Voice

இலங்கை வீரர் தனுஷ்க புதிய விதிமுறைகளில் ஆட்டமிழப்பு -கிரிக்கெட் உலகில் புதிய சர்ச்சை



இலங்கை அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர் தனுஸ்ககுணதில களத்தடுப்பாளர்களிற்கு இடையூறுவிளைவித்தார் என்ற அடிப்படையில் ஆட்டமிழந்தார் என அறிவிக்கப்பட்டமை கிரிக்கெட் உலகில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் காணப்பட்டவேளை தனுஸ்ககுணதிலக  சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தவேளை வழமைக்கு மாறான முறையில் அவர் ஆட்டமிழந்தார் என நடுவர் அறிவித்தார்.

பொல்லார்ட்டின் பந்தை அடித்துவிட்டு தனுஸ்க குணதிலக ஓட முயன்றார்;
 மறுமுனையில் காணப்பட்ட பதும் நிசங்கவும் ஓட முயன்றார் எனினும் தனது முடிவை மாற்றிய குணதிலக மீண்டும் கிறிஸிற்குள் திரும்ப முயன்றவேளை பொல்லாட் விக்கெட்டை நோக்கி எறிந்த பந்து அவரது காலில் பட்டது .

மேற்கிந்திய அணியின் தலைவர் உடனடியாக நடுவரிடம் முறையீடு செய்தார் ,நடுவர் மூன்றாவது நடுவரின் தீர்ப்பை கோர அவர் தனுஸ்க குணதில ஆட்டமிழந்தார் என அறிவித்தார்.
இதனால் தனுஸ்க குணதில அதிர்ச்சியடைந்தார்.

இலங்கை அணியின் பயிற்றுவி;ப்பாளர் மிக்கி ஆர்தரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆட்டமத்தியஸ்தரின் பகுதிக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது.

இந்த தீர்ப்பு குறித்து பல முன்னாள் வீரர்கள்  கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்

வேண்டுமென்றே களத்தடுப்பில் குறுக்கிட்டாரா தனுஸ்க  என கேள்வி எழுப்பியுள்ள டொம்மூடி எந்தவகையிலும் அவ்வாறு தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

தனுஸ்க வேண்டுமென்றே களத்தடுப்பில் குறுக்கிட்டார் என நான் கருதவில்லை, நான் என்றால் நடுவரிடம் முறையிட்டிருக்கமாட்டேன் என மேற்கிந்திய அணியின் முன்னாள் தலைவர் டரன் சமி தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post