தளபதி 65 அடுத்த அப்டேட் வந்தாச்சு...இதுக்காக தான் படக்குழு 'வெயிட்டிங் - Yarl Voice தளபதி 65 அடுத்த அப்டேட் வந்தாச்சு...இதுக்காக தான் படக்குழு 'வெயிட்டிங் - Yarl Voice

தளபதி 65 அடுத்த அப்டேட் வந்தாச்சு...இதுக்காக தான் படக்குழு 'வெயிட்டிங்
டாப் நடிகர்களின் படங்கள் பற்றிய அப்டேட்டிற்காக அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அஜித்தின் வலிமை படத்திற்கு பிறகு அதிகம் பேர் கேட்பது தளபதி 65 அப்டேட் தான்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 பற்றி ஏதாவது ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்ற அப்டேட் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2 ஹீரோயின்கள் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாக முன்பே தெரிவிக்கப்பட்டது. 

இப்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக, சென்னை- பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோசில் பிரம்மாண்ட செட் தளபதி 65 படத்திற்காக அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 6 ம் தேதி நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்காக தான் படக்குழு காத்திருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிந்த பிறகு அல்லது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கோகுலம் ஸ்டூடியோசில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாகவும், அதை முடித்த பிறகு அனுமதி கிடைத்ததும், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post