தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது - சென்னையில் ராகுல்காந்தி - Yarl Voice தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது - சென்னையில் ராகுல்காந்தி - Yarl Voice

தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது - சென்னையில் ராகுல்காந்தி
3000 ஆண்டுகால வரலாற்றில் தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது என்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ராகுல்காந்தி தெரிவித்தார்.

தமிழக சிந்தனை மீது முழு தாக்குதல் நடத்தப்பட்டுகிறது. இதை குறைத்து மதிப்பிடாதீர்கள். இதற்கு பின் பெரிய பணபலம் உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக பின்புலமாக உள்ளது. தமிழகம் அவர்கள் முன் மண்ணியிட வேண்டும் என பாஜக, ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.

அவர்களுக்கு தமிழர்களை பற்றி எதுவும் புரியாது. 3000 ஆண்டுகால வரலாற்றில் தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது. தமிழர்களை யார் மரியாதையாக நடத்துகிறார்களோ அவர்களை தமிழர்கள் மரியாதையாக நடத்துவார்கள். இந்த மண்ணுக்கு மரியாதை கொடுத்தவர்கள் யாரும் அவமதிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. 3000 வருடத்தில் யாரையும்
அவமரியாதை செய்ததில்லை

தமிழகத்தை நீங்கள் அரவணைத்தால் தமிழகம் உங்களை அரவணைக்கும். இதை நானும் எனது குடும்பத்தினரும் புரிந்துகொண்டுள்ளோம். நாங்கள் ஒருபங்கு கொடுத்தால் நீங்கள் இருபங்கு திருப்பி கொடுப்பீர்கள்.  அன்பு, மரியாதையை தவிர வேறு எந்த உறவும் உங்களிடம் இருந்து நான் பெற எண்ணுவதில்லை. தமிழகம் தான் இந்தியாவின் மையப்புள்ளி. தமிழகம் இல்லாமல் இந்தியா இல்லை.

 இந்தியாவின் சிந்தனைக்கு அடித்தளமே தமிழகம் தான். தமிழக பண்பாடு, மொழியை பாதுகாக்க வந்துள்ளேன். ஜனநாயகம் மீது தாக்குதல் நடைபெறுகிற்து. அதனால்தான் நான் இங்கு உள்ளேன். தமிழகம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post