தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம் - Yarl Voice தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம் - Yarl Voice

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்

 


தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை இன்று சன் டிவி ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.

டிகர் விஜய் கிரே கலர் சட்டையில் பூஜையில் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை இன்று சன் டிவி ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.

 சர்க்கார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் இந்த படத்தில் நடிக்க உள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.

தளபதி 65 படத்தின் பூஜை போடப்பட்ட செய்தி காட்டுத் தீ போல சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 மேலும், தளபதி ரசிகர்கள் Thalapathy65 ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். 

நடிகர் விஜய் படங்களுக்கு இதற்கு முன் போடப்பட்ட பூஜை போட்டோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் விரைவில் படத்தின் பட பூஜை போட்டோக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ள நிலையில், தளபதி தரிசனத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

ஏதாவது போட்டோக்கள் முன்னதாக லீக் ஆகாதா என்றும் சோஷியல் மீடியாவில் வட்டமிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post