இலங்கைக்கு மீண்டும் ஒரு தொகுதி கொவிட் தடுப்பூசிகளை வழங்கிய சீனா - Yarl Voice இலங்கைக்கு மீண்டும் ஒரு தொகுதி கொவிட் தடுப்பூசிகளை வழங்கிய சீனா - Yarl Voice

இலங்கைக்கு மீண்டும் ஒரு தொகுதி கொவிட் தடுப்பூசிகளை வழங்கிய சீனா



சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் சற்று முன் இலங்கை வந்தடைந்தது.

ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு சீன தூதுவரால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன் இவை   இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post