ஏ9 பிரதான வீதியை மறித்து யாழில் போராட்டமொன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது.
தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி வட மாகாண சுகாதார தொண்டர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக மூன்று நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் சாதகமான பதில் கிடைக்காததால் இன்று மதியம் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment