தொழிலாளர் மீதான வன்முறையை வேடிக்கைப் பார்க்க முடியாது : ஜீவன் தொண்டமான் - Yarl Voice தொழிலாளர் மீதான வன்முறையை வேடிக்கைப் பார்க்க முடியாது : ஜீவன் தொண்டமான் - Yarl Voice

தொழிலாளர் மீதான வன்முறையை வேடிக்கைப் பார்க்க முடியாது : ஜீவன் தொண்டமான்




தோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கி கோரி போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்ட அதிகாரிகள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கோரும் பட்சத்தில், தொழிலாளர்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கிக் கோரினால் இவர்களிடம் என்ன பதில் உள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொழிலாளர் உரிமைகளை மதித்து, தோட்ட நிர்வாகத்தை சரியான முறையில், சட்டத் திட்டங்களுக்கமைய முன்னெடுத்துச் செல்லும் பட்சத்தில் இவ்வாறான முட்டாள் தனமான கோரிக்கைகளை தோட்ட அதிகாரிகள் முன்வைக்க நேரிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் உரிமை என்பது மதிக்கப்பட வேண்டும் என்றும், பிரச்சினைகள் இருக்கும் பட்சடத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்வதே ஜனநாயக பண்பு எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களை வன்முறைக்கு இழுத்துவிடும் இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தோட்ட அதிகாரிகள் தொழிலாளர் மீது வன்முறையை திணிக்கும் பட்சத்தில், அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க இ.தொ.கா. உள்ளிட்ட தனது தலைமை தயார் இல்லை என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post