ஏ ஆர் ரஹ்மான் கனவு படமான ‘99 சாங்ஸ்’படத்தின் ட்ரைலர் வெளியானது.! - Yarl Voice ஏ ஆர் ரஹ்மான் கனவு படமான ‘99 சாங்ஸ்’படத்தின் ட்ரைலர் வெளியானது.! - Yarl Voice

ஏ ஆர் ரஹ்மான் கனவு படமான ‘99 சாங்ஸ்’படத்தின் ட்ரைலர் வெளியானது.!ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதை ‘99 சாங்ஸ்.  இசையை ஆன்மாவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில்  ட்ரைலர், கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடன் இத்திரைப்படத்தின் மாயஜால இசை உலகத்தின் கதவுகளை சற்றே நமக்கு திறந்து காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘தி தேவாரிஸ்ட்ஸ்’ மற்றும் ‘பிரிங் ஆன் தி நைட்’ புகழ் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திறமைமிக்க நடிகரான ஏஹன் பட்டை ‘99 சாங்ஸ்’ மூலம் ரஹ்மான் அறிமுகப்படுத்துகிறார். நடிகை எடில்ஸி வர்காஸுக்கு ஜோடியாக ஏஹன் பட் நடிக்கிறார்.

RELATED NEWSSee All
காதல் புகழ் விருச்சககாந்த் ஆட்டோவில் படுத்தப்படியே மரணம்..!

0/Post a Comment/Comments

Previous Post Next Post