மாநகர முதல்வர் மணிவண்ணணுக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice மாநகர முதல்வர் மணிவண்ணணுக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

மாநகர முதல்வர் மணிவண்ணணுக்கு கொரோனா தொற்று உறுதி


யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் , குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. 
அதன் அடிப்படையில் இன்றைய தினம் காலை முதல்வரிடமும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. 
அதேவேளை ,20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு பட்டோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்கள் விபரங்களை வழங்குமாறும்  முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post