ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்டை இலங்கை;கு விஜயம் மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமை ஆணையாளர் இலங்கையை கடுமையாக சாடும் அறிக்கையை வெளியிட்ட பின்னர் இது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் காணப்படும் நிலவரத்தினை மனித உரிமை ஆணையாளர் நேரில் பார்வையிடுவதற்காக அவரை இலங்கைக்குஅழைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஆராயப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளர் எனி;னும் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வின் இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment