இந்த முறையும் ஏமாற்றம்.. ஆஸ்கர் போட்டியில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்று வெளியேற்றம்! - Yarl Voice இந்த முறையும் ஏமாற்றம்.. ஆஸ்கர் போட்டியில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்று வெளியேற்றம்! - Yarl Voice

இந்த முறையும் ஏமாற்றம்.. ஆஸ்கர் போட்டியில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்று வெளியேற்றம்!




ஆஸ்கர் பரிந்துரை பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வெளியிட்டுள்ளனர். 

ஆஸ்கர் என அழைக்கப்படும் 93வது அகாடமி விருதுகள் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது
சூர்யாவின் சூரரைப் போற்று நாமினேஷன் பட்டியலில் ஆவது தேர்வாகுமா? என்கிற எதிர்பார்ப்பு கடைசி நேரத்தில் நிறைவேறாமல் போய் விட்டது.
92வது ஆஸ்கர் போட்டிக்கான இறுதி பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சிறந்த திரைப்படம், சிறந்த நாயகன், சிறந்த நாயகி உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கான ஆஸ்கர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. ஒடிடி படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்கிற சிறப்பு விதியின் கீழ் ஆஸ்கர் போட்டிக்கு சூர்யாவின் சூரரைப் போற்று அனுப்பி வைக்கப்பட்டது

இந்திய அரசு சார்பாக சிறந்த அயல் மொழித் திரைப்பட பிரிவில் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலேயே அந்த படம் தேர்வாகாமல் வெளியேறியது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் ஓட்டிங்கிற்கு வரை சென்றது.

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதற்கான உத்தேச பட்டியல் போட்டியில் தொடர்ந்து 7 நாட்கள் சூரரைப் போற்று திரையிடப்பட்டு, அங்குள்ள ஜூரிக்களால் தேர்வு செய்யப்பட்டது.

 கிட்டத்தட்ட 366 படங்கள் இந்த இறுதியில் போட்டியில் கலந்து கொண்டன. அதில் இந்தியாவில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்றும் கலந்து கொண்டதே பெருமையாக பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகி உள்ள இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று இடம்பெறவில்லை. மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் ஆமிர் கானின் லகான் திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு இந்திய திரைப்படம் கூட ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post