கொரோனா தொற்றல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்தியாவில் சடுதியாக அதிகரிப்பு - Yarl Voice கொரோனா தொற்றல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்தியாவில் சடுதியாக அதிகரிப்பு - Yarl Voice

கொரோனா தொற்றல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்தியாவில் சடுதியாக அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 704 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11இ139இ323 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10இ810இ162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 1 இலட்சத்து 71 ஆயிரத்து 776 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.

மேலும் நேற்று ஒரேநாளில் 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 57 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post