கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லீம் ஐனாசாக்களை களிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதென்ற அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 09 மணியளவில் இரணைமாதா நகர் இறங்குதுறையில் ஆரம்பமாகியுள்ளது.
இரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
குறித்த தீர்மானம் சிறுப்பான்மையின மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில்இ குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதேநேரம்இ குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment