அமெரிக்க வங்கியில் மோசடி செய்ததாக சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கைது - Yarl Voice அமெரிக்க வங்கியில் மோசடி செய்ததாக சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கைது - Yarl Voice

அமெரிக்க வங்கியில் மோசடி செய்ததாக சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கைது



அமெரிக்க வங்கி கணக்குகளை ஹக் செய்யப்பட்டு அவரது வங்கி கணக்கில் பணம் மாற்றப்பட்ட  மோசடி சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 41 வயதான சந்தேக நபரை குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

ஹக்கர் குழுக்கள்  ஒரு தனியார் வங்கியில் சந்தேக நபர் வைத்துள்ள கணக்கில் 13.4 மில்லியன் ரூபா பணம் வைப்பிடப்பட்டுள்ளது.  சந்தேகநபர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மோசடி கூட்டாளிகளின் உதவியுடன் நிதியைப் பெற முடிந்துள்ளது

கூட்டாளிகள் அமெரிக்க வங்கிக் கணக்குகளை ஹக் செய்து யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரியில் உள்ள சந்தேக நபருக்கு பணத்தை மாற்றியுள்ளனர்.

 பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த மோசடியில் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கு பணம் வழங்கப்படுகிறது.

மேலும் கடந்த ஏப்ரல் முதல்  மோசடிகளில் 140 மில்லியன் உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பண மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 30 சந்தேக நபர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற சம்பவம் தொடர்பாக புகார் வந்ததை அடுத்து, 29 வயதான சந்தேகநபர் வவுனியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

 விசா இன்டர்நேஷனல் பெற்ற புகார்களைத் தொடர்ந்து ஹக்கிங் சம்பவங்கள் குறித்து சிஐடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post